கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களை தேடி கடற்படையின் நடவடிக்கை
இன்று (2021 நவம்பர் 23) காலை 0730 மணியளவில் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் மக்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதுடன் அங்கு காணாமல் போனவர்களை தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, கடற்படையின் விரைவு நடவடிக்கை படகுகள் படையணி, மரைன் படைப்பிரிவு, சிறப்பு படகுகள் படையணி மற்றும் சுழியோடி பிரிவு அடங்கிய 08 நிவாரண குழுக்கள் தற்போது விபத்து நடந்த இடத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பாலத்தில் நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட குறித்த படகுப்பாதை மக்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்று (2021 நவம்பர் 23) காலை விபத்து இடம்பெற்ற போது, குறித்த படகில் பாடசாலை மாணவர்கள் உட்பட சிலர் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்தது.
மேலும், விபத்தில் காயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 06 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கடற்படையினர் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.