சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற 1437 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைது
கடற்படையினர் 2021 நவம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மன்னார் வங்காலபாடு மற்றும் தால்பாடு கரையோரப் பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற 1437 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர்கள் மூவரும் (03) ஒரு டிங்கி படகும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2021 நவம்பர் 18 ஆம் திகதி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் தால்பாடு கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனை செய்வதற்காக அந்த பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, தல்பாடு கடற்கரை பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 36 பைகளில் அடைக்கப்பட்ட சுமார் 1357 கிலோகிராம் (ஈரமான எடை) உலர் மஞ்சளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் சிறப்பு படகுகள் படையணியின் ஒரு குழுவினரால் 2021 நவம்பர் 17ஆம் திகதி அதிகாலை மன்னார் வங்காலபாடு கடற்பரப்பில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் கரையை நோக்கிச் சென்ற டிங்கி (01) படகு ஒன்றை சோதனை செய்யப்பட்டதுடன் அப்போது டிங்கி படகு மூலம் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட இரண்டு பைகளில் சுமார் 80 கிலோகிராம் உலர் மஞ்சள் பொதி கண்டுபிடிக்கப்பட்டது. உலர்ந்த காய்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகுடன் 03 சந்தேக நபர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பேசாலை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தலுக்காக பேசாலை பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் மஞ்சள் மற்றும் டிங்கி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், மன்னார், தல்பாடு கடற்கரையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் மஞ்சள், மேலதிக சட்ட நடவடிக்கை வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.