வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் கடற்படையினரால் மீட்பு
கடும் மழை காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கடந்த 48 மணித்தியாலங்களில் (2021 நவம்பர் 08 முதல் 10 வரை) கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு 288 பேரை மீட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களை உள்ளடக்கி களுத்துறை பரகொட, இரத்தினபுரி புதிய நகரம், காலி உடலமத்த, புத்தளம் பாலவிய, வனாத்தவில்லுவ, எலுவன்குளம, மன்னார் பாதை, கற்பிட்டி, உடுபத்தாவ தாராவில்லுவ, கொடதெனியாவ மற்றும் கரபே, குருநாகல் கிரிஉல்ல மற்றும் அனுராதபுரம் ராஜாங்கனை ஆகிய பகுதிகளில் 14 கடற்படை நிவாரணக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, கல்பிட்டி பாலாவிய மற்றும் கரம்பே பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட 95 பேரும், குருநாகல் கிரிஉல்ல பகுதியில் மா ஓயா பெருக்கெடுத்து ஓடியதில் பாதிக்கப்பட்ட 77 பேரும், கலா ஓய மற்றும் பத்துலு ஓய நிரம்பியதால் புத்தளம் வநாதவில்லுவ, எழுவன்குளம மற்றும் தாரவில்லுவ பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட 93 பேரும், உடுபத்தாவ பிரதேசத்தில் கரபலன் ஓய நிரம்பியதால் பாதிக்கப்பட்ட 23 பேரும் இவ்வாரு கடற்படையினரால் மீட்டுள்ளனர். இந்நிலையில், கடற்படையினர் 288 பேரை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், கனமழை பெய்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, கிழக்கு, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படைக் கட்டளைகளில் 60 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.