சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற 1175 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன
மன்னார், வன்காலை கடல் பகுதியில் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையில் 2021 செப்டம்பர் 19 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 1175 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்துடன் இணைக்கப்பட்ட P 012 கடலோர காவல்படை படகு மூலம் 2021 செப்டம்பர் 19 ஆம் திகதி மாலை மன்னார் வன்காலை கடலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது மீன் பிடிக்க அமைக்கப்பட்ட ஒரு அடைப்பில் மூழ்கி வைத்திருந்த சுமார் 805 கிலோ மற்றும் 400 கிராம் (ஈரமான எடையுடன்) எடையுள்ள மஞ்சள் 12 சாக்குகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிறுவனத்தின் கடற்படை வீர்ர்களினால் 2021 செப்டம்பர் 22 அன்று யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையில் மேற்கொன்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரையில் நிறுத்தி இருந்த படகுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு படகொன்றில் ஏழு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 369 கிலோ 650 கிராம் மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் மீன்பிடி படகு கடற்படையின் காவலுக்கு எடுக்கப்பட்டது.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட 1175 கிலோகிராமுக்கு (ஈரமான எடை) மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு ஆஜர்படுத்தப்படும் வரை வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டன