ரூ. 1575 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான ஹெராயின் போதைப்பொருற்கள் கடத்திய மற்றொரு மீன்பிடி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர் இலங்கையின் தெற்கு சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது 2021 செப்டம்பர் 10 ஆம் திகதி கைது செய்த ரூ. 1575 மில்லியன் மதிப்புள்ள 170 கிலோ 866 கிராம் (பொதிகள் உட்பட) ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டு மீன்பிடி கப்பலை அங்கிருந்த 09 வெளிநாட்டு சந்தேக நபர்களுடன் இன்று காலை (2021 செப்டம்பர் 18) கொழும்பு துறைமுகத்திக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு முன், இலங்கை கடற்படை புலனாய்வு பிரிவு, மாநில புலனாய்வு சேவையுடன் ஒருங்கிணைந்து ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்த 290 கிலோ 200 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கடத்திய உள்நாட்டு மீன்பிடி கப்பலை அங்கிருந்த 05 உள்நாட்டு சந்தேக நபர்களுடன் 2021 ஆகஸ்ட் 31 ஆம் திகதியும், இலங்கையின் தெற்கு சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட மற்றொரு வெற்றிகரமான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 336 கிலோ 300 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டு மீன்பிடி கப்பலை அங்கிருந்த 07 வெளிநாட்டு சந்தேக நபர்களுடன் 2021 செப்டம்பர் 04 அன்று கரைக்கு கொண்டு வந்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மேலதிக விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலும், இலங்கை காவல்துறை வழங்கிய உளவுத்துறையின் அடிப்படையிலும் இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் சர்வதேச கடலில் சிறப்பு நடவடிக்கையை நடத்தியது.அங்கு, நிலப்பகுதியிலிருந்து சுமார் 850 கடல் மைல்கள் (சுமார் 1574 கிமீ) தூரத்தில் இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு மீன்பிடி கப்பலொன்று காணப்பட்டதுடன் அதை மேலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பல நாள் கப்பலில் நுட்பமாக மறைத்து கடத்தி கொண்டிருந்த 150 பார்சல்களில் 170 கிலோ 866 கிராம் (பொதிகள் உட்பட) ஹெராயின் மற்றும் 306 கிராம் அபின் என்ற போதைப்பொருட்கள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, குறித்த வெளிநாட்டு பல நாள் மீன்பிடி கப்பலில் இருந்த 09 வெளிநாட்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இவ்வாரு கைது செய்யப்பட்ட கப்பல் மற்றும் சந்தேகநபர்கள் இன்று (2021 செப்டம்பர் 18) காலையில், இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
போதைப்பொருட்களை எடுத்துச் செல்லும் இந்த வெளிநாட்டு மீன்பிடி கப்பல் சர்வதேச கடலில் கடத்தல்காரர்களால் போதைப்பொருட்களை இடமாற்றம் செய்து நாட்டிற்கு கொண்டு வருவதற்காக, பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல் என்ற போர்வையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், 2021 ஆகஸ்ட் 30 முதல் இன்றுவரை கடற்படையால் நடத்தப்பட்ட முக்கிய போதைப்பொருள் சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஹெராயின் இருப்புக்களின் மொத்த தெரு மதிப்பு ரூ. 07 பில்லியனை நெருங்குகிறது என்று நம்பப்படுகிறது.
தற்போதுள்ள கொவிட்- 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் மேற்கொள்ளப்படும்.
இங்கே, இந்த நடவடிக்கைக்கு பங்களித்த இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவின் கடற்படையினரை கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன உறையாடினார். ஆழ்கடலில் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான நடவடிக்கைக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, சார்பாக தனது மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
தற்போதைய தொற்றுநோய் நிலைமை இருந்தபோதிலும், நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்கான தேசிய நோக்கத்தை அடைய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் முதல் பாதுகாப்பு வளையமாக இலங்கை கடற்படை தொடர்ந்து தனது கடமைகளை மேற்கொண்டு வருகிறது.