ரூ .28 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைது
நகர்கோவில் கடற்கரை பகுதியில் இன்று (2021 ஜூன் 07) நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 96 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் இன்று (2021 ஜுன் 01) நகர்கோவில் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது கடலோரத்திலிருந்து 03 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 96 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது. கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக கேரள கஞ்சாவை கடத்தல்காரர்கள் கைவிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ 28 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகிறது.
கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் இன்று (2021 ஜூன் 07) கடற்படையின் மேற்பார்வையில் வடக்கு கடற்படை கட்டளையில் வைத்து அழிக்க உள்ளது.