வெள்ள அபாயங்கள் குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்
சீரற்ற வானிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்க தெற்கு மாகாணத்தில் மற்றும் மேற்கு மாகாணத்தில் பல பகுதிகள் உள்ளடக்கி இன்று (2021 ஜூன் 03) கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் 05 நிவாரண குழுக்களை நிறுத்தப்பட்டது.
பெய்யும் கனமழையால், கலு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர்மட்டங்கள் உயர்ந்து வருவதால் இந்த பகுதிகள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தில் உள்ளது. இந்தப் பின்னணியில், தெற்கு கடற்படை கட்டளை மூலம் தவலம, ஹினிதும மற்றும் ஏப்பல பகுதிகளுக்கு 03 கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண குழுக்களையும், மேற்கு கடற்படை கட்டளை மூலம் புலத்சிங்கல, பரகொட பகுதிகளுக்கு மற்றும் புலத்சிங்கல பிரதேச செயலக வளாகத்துக்கு 02 நிவாரணக் குழுக்களையும் அணுப்பி வைக்கப்பட்டன.
மேலும், பாதகமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரணக் குழுக்கள் தயாராக உள்ளது.