இன்று (2021 ஜூன் 01) காலை மாதகல் மாசன்குடா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 101 கிலோ மற்றும் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

">

ரூ .30 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான மற்றொரு கேரள கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இன்று (2021 ஜூன் 01) காலை மாதகல் மாசன்குடா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 101 கிலோ மற்றும் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் இன்று (2021 ஜூன் 02) மாதகல் மாசன்குடா கடற்கரையில் மேற்கொண்டுள்ள சிறப்பு ரோந்துப்பணியின் போது, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் இருந்து இறக்கிக்கொண்டிருந்த இரண்டு கேரள கஞ்சா பைகளுடன் குறித்த டிங்கி படகு மற்றும் அங்கிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், இப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கை காரணத்தினால் கொண்டு செல்ல முடியாமல் கடத்தல்காரர்களால் கடற்கரையில் கைவிடப்பட்ட இரண்டு கேரள கஞ்சா பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் படி, இந்த நடவடிக்கை மூலம் மொத்தம் 101 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ 30 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகிறது.

கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாதகல் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைகளுக்காக இலவாலே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையின் விழிப்புணர்வு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், கடந்த 04 நாட்களில் மட்டும் கடத்தல்காரர்களினால் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த ரூ .63 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 212 கிலோ 235 கிராம் கேரள கஞ்சாவை வடக்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினரால் கைப்பற்ற முடிந்தது.