சீரற்ற வானிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை இன்று (2021 மே 23) தெற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் நான்கு நிவாரண குழுக்களை நிறுத்தியது.

">

வெள்ள அபாயங்கள் குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற வானிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை இன்று (2021 மே 23) தெற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் நான்கு நிவாரண குழுக்களை நிறுத்தியது.

அதன்படி, தவலம பிரதேச செயலக பிரிவில் உள்ள ஹினிதும மற்றும் ஏப்பல பகுதிகளிலும், நாகொட பிரதேச செயலக பிரிவில் உள்ள நாகொட பகுதியிலும் நான்கு நிவாரண குழுக்கள் தெற்கு கடற்படை கட்டளையால் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள 08 வெள்ள நிவாரண குழுக்கள் தெற்கு கடற்படை கட்டளையில் நிறுத்தப்படுள்ளன.

மேலும், பாதகமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த 26 நிவாரணக் குழுக்களும், வட மத்திய கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த 05 நிவாரணக் குழுக்களும், வட மத்திய கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த 18 நிவாரணக் குழுக்களும் தயாராக உள்ளது