கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் 2021 மே 20 அன்று ஏற்பட்ட தீ விபத்தை இன்று (2021 மே 22) இலங்கை கடற்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

">

“கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி” என்ற தலைப்பின் கீழ் 2021 மே 21 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் 2021 மே 20 அன்று ஏற்பட்ட தீ விபத்தை இன்று (2021 மே 22) இலங்கை கடற்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இலங்கை கடற்படை, துறைமுக ஆணையம் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு 2021 மே 21 ஆம் திகதி தீ விபத்து ஏற்பட்ட கொள்கலன் கப்பலின் இருப்பிடத்தை அடைந்து நிலைமையை மேலும் கண்காணித்தனர். மேலும் கப்பலில் உள்ள கொள்கலன்களுக்கு மேலே தீப்பிழம்புகளும் காணப்படுகின்றதுடன் துறைமுக அதிகாரசபையைச் சேர்ந்த மூன்று இழுபறி படகுகள் தற்போது சுற்றுப்புற வெப்பநிலையைக் கட்டுப்படுத்த தீயைச் சுற்றியுள்ள கொள்கலன்களை குளிர்வித்து வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் தீயணைப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல மற்றும் ஒரு துரித தாக்குதல் படகு குறித்த இடத்தில் உள்ளது. மேலும், அவசர சூனலையின் போது உடனடிக்கையாக நடவடிக்கை எடுக்க கடற்படையின் இழுபறி படகொன்றும் தயாராக உள்ளது.