சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 30 நபர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து 2021 மே 13 மற்றும் 14 திகதிகளில் சிலாபம், சமிதுகம பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 30 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து 2021 மே 13 மற்றும் 14 திகதிகளில் சிலாபம், சமிதுகம பகுதியில் நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்ற 14 நபர்கள் அவர்களுக்கு தங்குமிடம் வசதிகள் வழங்கிய வீட்டின் உரிமையாளருடன் கைது செய்யப்பட்டனர். இன்று (2021 மே 14), கடற்படை மற்றும் கடலோர காவல்படை சிலாபம் பொலிஸாருடன் இணைந்து மேலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்ற மேலும் 15 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 30 ஆண் சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைதீவு மற்றும் புத்தலம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.