ரூ .55 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவை வட கடலில் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து இன்று (2021 மே 03) யாழ்ப்பாணம் காங்கேசந்துரை கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 183 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போதுள்ள கோவிட் 19 சூழ்நிலையின் கீழ் கடல் வழியாக குடியேறுபவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து வடக்கு கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அதன் படி, கடத்தல்காரர்களால் இலங்கைக்குக் கொண்டுவர முயற்சித்து அதிகரித்த ரோந்து நடவடிக்கைகளின் விளைவாக, யாழ்ப்பாணம், காங்கேசந்துரை பகுதிக்கு வடக்கு கரையிலிருந்து 08 கடல் மைல் தொலைவில் கடலில் கைவிடப்பட்ட 04 சாக்குகளில் 58 பைகளாக அடைக்கப்பட்டுள்ள சுமார் 183.9 கிலொ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையால் மீட்கப்பட்டது.
இதற்கிடையில், மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ. 55 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட கஞ்சா பொதிகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.