கடல் வழிகள் மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு குடியேறியவர்கள் வருகையால் நாட்டில் கோவிட் 19 தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இதைக் கட்டுப்படுத்த, கடற்படை ரோந்துப் பணிகளை24 மணி நேரமும் அதிகரிப்பதன் மூலம் வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.

">

செய்தி வெளியீடு


சட்டவிரோத இடம்பெயர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக கடல் எல்லையின் பாதுகாப்பை பலப்படுத்துதல்

கடல் வழிகள் மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு குடியேறியவர்கள் வருகையால் நாட்டில் கோவிட் 19 தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இதைக் கட்டுப்படுத்த, கடற்படை ரோந்துப் பணிகளை24 மணி நேரமும் அதிகரிப்பதன் மூலம் வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.

அதன்படி, வடமேற்கு மற்றும் வடக்கு கடல்பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த கடலோர மற்றும் ஆழ்கடலில் கடற்படை ரோந்துப் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படை ரோந்து படகுகள் மற்றும் விரைவான தாக்குதல் ரோந்து படகுகள் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே நிறுத்தவும், நிலத்திற்கு அருகே கடல் பாதுகாப்பை வலுப்படுத்த கடலோர காவல்படை ரோந்து படகுகளை நிறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கிழக்கு கடற்படை கட்டளை இந்த சிறப்பு நடவடிக்கைகளுக்காக வடக்கு கடற்படை கட்டளைக்கு கப்பல்களையும் படகுகளையும் இணைத்துள்ளது, அதே நேரத்தில் மேற்கு கடற்படை கட்டளை மூலம் சிலாபத்திலிருந்து மன்னார் வரை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

மேலும், கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கடற்படை கண்கானிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வருகை தொடர்பாக ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும், கடலில் வெளிநாட்டினருடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கவும் இப்பகுதியில் உள்ள மீன்பிடி சமூகத்திற்கு தெரிவிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நேரத்தில், வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும், அத்தகைய இணைப்புகள் குறித்த எந்தவொரு தகவலையும் கடற்படைக்கு வழங்குமாரு அனைத்து மீன்பிடி சமூகங்களிடம் கடற்படை கேட்டுக்கொள்கிறது.

மேலும், கடந்த இரண்டு வாரங்களில் வடமேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சர்வதேச கடல் எல்லைகளை மீறி இலங்கை கடலுக்குள் நுழைந்த நான்கு இந்திய படகுகள் (Dhow), உலர்ந்த மஞ்சள், ஏலக்காய், பீடி இலைகள் மற்றும் பல பொருட்களுடன் 21 இந்திய நாட்டினரை கடற்படை கைது செய்தது.

மேலும், தற்போதுள்ள கோவிட் 19 வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்திய படகுகள் கைப்பற்றப்பட்ட இந்தியர்களுடன் இந்திய கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டனர், மேலும் கடற்படை ரோந்துகளின் அதிகரிப்பு காரணத்தினால் வெளிநாட்டு கடத்தல்காரர்களையும் கப்பல்களையும் குறுகிய காலத்தில் கைப்பற்ற முடிந்தது.