2021 ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வடமேற்கு கடல் பகுதியூடாக சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடல் பகுதிக்கிக்குள் நுழைந்த இரண்டு இந்திய படகுகள் (Dhow), சுமார் 2790 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 803 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் பிற உணவுப் பொருட்களுடன் 12 இந்திய நாட்டினர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

">

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற உலர்ந்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது

2021 ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வடமேற்கு கடல் பகுதியூடாக சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடல் பகுதிக்கிக்குள் நுழைந்த இரண்டு இந்திய படகுகள் (Dhow), சுமார் 2790 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 803 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் பிற உணவுப் பொருட்களுடன் 12 இந்திய நாட்டினர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினர் 2021 ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் குதிரமலை கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது சர்வதேச கடல் எல்லையை (IMBL) மீறி இலங்கை கடல் பகுதிக்கிக்குள் நுழைந்த இரண்டு சந்தேகத்திற்குரிய இந்திய படகுகளை கண்கானித்து சோதனை செய்தனர். அப்போது ஒரு படகில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 425 கிலோகிராம் ஏலக்காய், பிற உணவு மற்றும் நுகர்பொருட்களுடன் 07 இந்திய நாட்டினர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி சோதனை செய்யப்பட்ட படகில் இருந்து 2790 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 93 பைகளில் பொதி செய்யப்பட்ட 378 கிலோகிராம் ஏலக்காயுடன் 05 இந்திய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாரு இந்திய படகுகள் மூலம் கொண்டு வந்த ஏலக்காய், உலர்ந்த மஞ்சள் மற்றும் பிற நுகர்பொருட்களை கடலில் வைத்து இலங்கை படகுகளுக்கு மாற்ற கடத்த கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட ஏலக்காய், உலர்ந்த மஞ்சள் மற்றும் பிற நுகர்பொருட்களை கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டன. நிலவும் கோவிட் 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, படகுகளுடன் 12 இந்திய நாட்டினர் மீண்டும் இந்திய கடல் பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

சர்வதேச கடல் பகுதியில் கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய கடத்தல்களை தடுக்கவும், கோவிட் 19 வைரஸ் பரவாமல் தடுக்கவும் இலங்கை கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி உள்ளடக்கி தொடர்ச்சியான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.