2021 ஏப்ரல் 17 முதல் 20 ஆம் திகதி வரை நீர் கொழும்பு, முன்னக்கரை களப்பு, மன்னார், குடிஇருப்பு மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் 1263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

">

சட்டவிரோத கடத்தலின் மற்றொரு முயற்சியை கடற்படையினரால் தடுக்கப்பட்டது

2021 ஏப்ரல் 17 முதல் 20 ஆம் திகதி வரை நீர் கொழும்பு, முன்னக்கரை களப்பு, மன்னார், குடிஇருப்பு மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் 1263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி மன்னார் குடிஇருப்பு கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு 15 பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 543 கிலோ மற்றும் 700 கிராம் (ஈரமான எடை) மஞ்சளுடன் குறித்த டிங்கி படகு மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர். மேலும், ஏப்ரல் 20 ம் திகதி பேசாலை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படை நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட 258 கிலோ மற்றும் 500 கிராம் (ஈரமான எடை) உலர்ந்த மஞ்சள் நான்கு பைகளுடன் இரண்டு சந்தேக நபர்களையும் ஒரு டிங்கியையும் கடற்படை கைப்பற்றியது.

மேலும், 2021 ஏப்ரல் 17, அன்று மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டதுடன், அங்கு 14 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 461 கிலோ மற்றும் 500 கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 44 வயதுக்குட்பட்ட பேசாலை மற்றும் நீர் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீர் கொழும்பு களப்பு பகுதியில் கடற்படை கைப்பற்றிய மஞ்சள், டிங்கி படகு மற்றும் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மெலும், மன்னார், குடிஇருப்பு மற்றும் பேசாலை பகுதிகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர், அதே நேரத்தில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.