சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் கடற்படையினரால் கைது
நீர் கொழும்பு, கொச்சிக்கடை கடற்கரை பகுதியில் 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 770 கிலோ கிராம் பீடி இலைகளுடன் (Kendu Leaves) 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீர் கொழும்பு, கொச்சிக்கடை கடற்கரையில் மேற்கு கடற்படை கட்டளை நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, கரையை நெருங்கும் சந்தேகத்திற்கிடமான மூன்று டிங்கி படகுகள் சோதனை செய்தனர், அப்போது டிங்கி படகுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 பொட்டலங்களில் நிரம்பிய 770 கிலோ கிராம் பீடி இலைகள், சுமார் 05 கிலோ கிராம் ஏலக்காய் மற்றும் ரூ .155,000.00. பணத்துடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பங்கதெனிய மற்றும் அந்தரகம பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக கடுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.