கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினர் கடந்த 02 வாரங்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகளுடன் சுழியோடி உபகரனங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

">

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகள் கடற்படை கைப்பற்றியது

கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினர் கடந்த 02 வாரங்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகளுடன் சுழியோடி உபகரனங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் சில நபர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடல் சூழலில் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளைத் தடுக்கும் வகையில் இலங்கை கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடலில் பகல் மற்றும் இரவு ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர், வலைப்பாடு மற்றும் இரணைதீவு கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, இரவு சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 6878 கடல் அட்டைகளுடன் 11 டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் 53 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், அரிப்பு, கோண்தச்சிகுடா மற்றும் கல்பிட்டி கடல் பகுதிகளிலும் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் அல்லப்பிட்டி கடல் பகுதியிலும் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சல்லிமுனை கடல் பகுதியிலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் போது 3341 கடல் அட்டைகளுடன் 07 மீன்பிடி படகுகள், பல மீன்பிடி பொருட்கள் மற்றும் 22 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 2021 பிப்ரவரி 16 முதல் மார்ச் 30 வரை கடற்படை கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வட மத்திய மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு பல சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அப்போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன் பிடித்தல், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறா மற்றும் அவற்றின் துடுப்புகளை வைத்திருத்தல், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட நண்டுகளை வைத்திருத்தல் ஆகியவற்றுக்காக 41 மீன்பிடி படகுகளுடன் 128 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, பருத்தித்துறை, லுனுவில, தொடுவாவ, நீர்கொழும்பு, கந்தர, குச்சவேலி, செண்தூன், கின்னியா, பொத்துவில், குதிரவேலி, கரடிகுலை, கல்பிட்டி, ஜின்நமுஹம், சிலாவத்துர, புத்தலம், மன்னார், அல்லப்பிட்டி, சீனா துறைமுகம், அரிப்பு, கந்தக்குலிய, நச்சிகுடா, சல்லிசாம்பல்தீவு, குருநகர், தலைமன்னார்,பொடுவக்கட்டு, வன்காலே, முத்தூர், கிரஞ்சி, சிவபுரம், முலங்காவில், அம்பலந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹராமய பகுதிகளில் வசிக்கும் 17 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி கைது செய்யப்பட்ட இந்த நபர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் பிற மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மன்னார் மற்றும் முத்தூர் உதவி மீன்வள ஆய்வு அலுவலகங்களுக்கும் குச்சவேலி, புத்தலம்,கல்பிட்டி, பூனரீன், சிலாவத்துர, யாழ்ப்பாணம் மற்றும் கிலினொச்சி மீன்வள ஆய்வு அலுவலகங்களுக்கும் கல்பிட்டி, ஊர்காவற்துறை மற்றும் திருகோணமலை காவல் நிலையங்களுக்கும் பருத்தித்துறை மற்றும் பொத்துவில் நீர்வள மேம்பாட்டு ஆணைய அலுவலகங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டனர்.