107 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன

கல்பிட்டி சோமதீவு பகுதியில் 2021 மார்ச் 08 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 107 கிலோ மற்றும் 125 கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கல்பிட்டி சோமதீவு பகுதியில் 2021 மார்ச் 08 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ மற்றும் 125 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்தனர். இந்த கேரள கஞ்சா கடற்படையின் நடவடிக்கை காரணத்தினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வட மத்திய, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகள் மூலம் 2021 பிப்ரவரி 23 முதல் மார்ச் 07 வரை தீவு முழுவதும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது 04 கிராம் மற்றும் 421 மி.கி ஹெராயின், 13 கிலோ மற்றும் 25 மி.கி கேரள கஞ்சா மற்றும் 07 கிலோ மற்றும் 752 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 முதல் 63 வயதுக்குட்பட்ட பெத்தெவெல, ஹம்பன்தோட்டை, நகர்கோவில், தெலிஜ்ஜவில, நாவச்சோலை, கல்முனை, திருகோணமலை, நீர்கொழும்பு, எம்பிலிபிடிய, வெல்லவாய மற்றும் எத்திலிவெவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதை பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை, புத்தலம், தலைமன்னார், வெலிகம, கல்பிட்டி, கல்முனை, பளை, தனமல்வில மற்றும் குடாஒய பொலிஸ் நிலையங்களுக்கும் யாழ்ப்பாணம் மற்றும் சர்தாபுர பொலிஸ் சிறப்பு பணிக்குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.