2021 பிப்ரவரி 16, அன்று மன்னார் கார்சல் பகுதியிலும், தாவுல்பாடு கடற்கரையிலும் கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, 02 கிலோவுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் (01) மற்றும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 400 கிலோவுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

">

02 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 400 கிலோவுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

2021 பிப்ரவரி 16, அன்று மன்னார் கார்சல் பகுதியிலும், தாவுல்பாடு கடற்கரையிலும் கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, 02 கிலோவுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் (01) மற்றும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 400 கிலோவுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, பிப்ரவரி 16 ம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் மன்னார் காவல்துறையினர் ஒருங்கிணைந்து மன்னார் கார்சல் பகுதியில் நடத்திய நடவடிக்கையின் போது 02 கிலோ மற்றும் 66 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். மன்னார், தாவுல்பாடு கடற்கரையில் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் குறித்த படகில் இருந்து 12 சாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 412 கிலொ மற்றும் 600 கிராம் எடையுள்ள உலர்ந்த மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டது. மஞ்சள் மற்றும் படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னார் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா சந்தேக நபருடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் உலர்ந்த மஞ்சளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக சிலாவதுர பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடற்படையால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது, மேலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வரை டிங்கி படகு கடற்படையின் காவலில் வைக்கப்பட்டது.