இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இனைந்து பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த திமிங்கலங்களை பாதுகாப்பாக காப்பாற்றி மீண்டும் கடலுக்கு அனுப்ப 2020 நவம்பர் 02 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.

">

பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த திமிங்கலங்களை கடற்படை உதவியுடன் பாதுகாப்பாக கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இனைந்து பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த திமிங்கலங்களை பாதுகாப்பாக காப்பாற்றி மீண்டும் கடலுக்கு அனுப்ப 2020 நவம்பர் 02 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாரு, பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த சுமார் 100 திமிங்கலங்கள் பாதுகாப்பாக காப்பாற்றி மீண்டும் கடலுக்கு அனுப்ப இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை, பொலிஸ் உயிர் காக்கும் குழுக்கள், தன்னார்வ உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நடவடிக்கைகாக 30 கடற்படை வீரர்கள், ஒரு உயிர் காக்கும் படகு, 30 கடலோர காவல்படை வீரர்கள்,ஒரு உயிர் காக்கும் படகு, கடற்படை விரைவான அதிரடி படையின் களுத்துறை விரைவு பதில் மீட்பு மற்றும் உதவி பிரிவின் 06 வீர்ர்கள் மற்றும் இரண்டு உயிர் காக்கும் படகுகள் கலந்துகொண்டன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வேண்டுகோளின் பேரில், உள்ளூர் நீர் விளையாட்டுக் கழகம் வழங்கிய ஜெட்ஸ்கீ Jet ski படகுகள் இந்த திமிங்கலங்களை நாள் முழுவதும் கடலுக்குள் இழுக்க பயன்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இறந்த நான்கு (04) திமிங்கலங்கள் குறித்து வனவிலங்கு பாதுகாப்புத் துறை தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திமிங்கலங்கள் முக்கரு கொமதுவா (Short–Finned Pilot Whale) வகை என அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் பாதை தவரிய ஒரு திமிங்கலம் பின்னே சென்ற காரனத்தினால் இவ்வாரு இந்த திமிங்கலங்கள் கரைக்கு வந்த்தாக நம்பப்படுகிறது.

நாட்டில் உள்ள கோவிட் 19 நிலைமை காரணமாக திமிங்கலங்களைப் பார்ப்பதற்காக மக்கள் கடற்கரையில் கூடிவருவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கையையும் இலங்கை காவல்துறை மேற்கொண்டுள்ளது.