கடந்த வாரத்தில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, ரூ .29 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 98 கிலோ மற்றும் 715 கிராம் கேரளா கஞ்சா, 950 மில்லிகிராம் ஐஸ் போதைபொருளுடன் (Crystal Methamphetamine) 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

">

ரூ .29 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடந்த வாரத்தில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, ரூ .29 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 98 கிலோ மற்றும் 715 கிராம் கேரளா கஞ்சா, 950 மில்லிகிராம் ஐஸ் போதைபொருளுடன் (Crystal Methamphetamine) 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் அக்டோபர் 29 ஆம் திகதி கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் உள்ள கடலில் மேற்கொண்டுள்ள ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்ய முயற்சித்தனர். அப்போது பல பொதிகள் கடலுக்குள் செலுத்தி குறித்த படகு கரைநகர் கசுரினா கரையை நோக்கி பயணித்தது. பின்னர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கசுரினா கரையில் கைவிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிங்கியை கடற்படை கைப்பற்றியது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக தேடுதல் நடவடிக்கைகளின் போது, சுமார் 82 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள 04 கேரள கஞ்சா பைகளை கடற்படை பறிமுதல் செய்ததுடன், கடற்படையால் கைப்பற்றப்பட்ட டிங்கியின் உரிமையாளரைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் பொலிஸ் சிறப்பு பணிக்குழு உடன் இணைந்து அக்டோபர் 26 ஆம் திகதி மன்னார் புத்துக்குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 04 கிலோ மற்றும் 450 கிராம் கேரள கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற ஒரு சந்தேக நபரை கைது செய்தது. மேலும், தலைமன்னார், ஊருமலை பகுதியில் காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிலோ மற்றும் 765 கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒரு பொதியை கடற்படை கண்டுபிடித்தது. நருவிலிக்குளம் பகுதியில் மேற்கொண்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையில், 10 கிலோ மற்றும் 50 கிராம் கேரள கஞ்சா நிரப்பப்பட்ட மேலும் 03 பொதிகளை கடற்படையினர் மீட்டெடுத்தனர்.

அக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வெல்வெட்டித்துரை பொலிஸார் இணைந்து வெல்வெட்டித்துரை, ஊரனி பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 950 மிலி கிராம் ஐஸ் போதைபொருளுடன் 02 சந்தேக நபர்களை கைது செய்தனர்.

மேலும், கடந்த வாரத்தில் மட்டும் கடற்படை நடத்திய நடவடிக்கைகளின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி மதிப்பு சுமார் ரூ .296,145,00.00 (29.61 மில்லியன்) என்று நம்பப்படுகிறது.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி கைது செய்யப்பட்ட இந்த நபர்கள் பருத்தித்துறை, ஊரனி மற்றும் கல்பிட்டி பகுதியில் வசிக்கும் 34 மற்றும் 39 வயதுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை, தலைமன்னார், மன்னார், வன்காலே மற்றும் வெல்வெட்டித்துரை பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டனர்.