கிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பகுதிகளில் 2020 அக்டோபர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

">

கிழக்கு மற்றும் வடமேற்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் மூலம் 10 நபர்கள் கைது

கிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பகுதிகளில் 2020 அக்டோபர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் அக்டோபர் 27 ஆம் திகதி சல்பெஆரு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கையின் போது வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குச்சவேலி பகுதியில் வசிக்கும் 04 சந்தெகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி படகு, மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உருகிகள் (High Explosive Charges),சுழியோடி உபகரனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையொன்று கடற்படையால் கைப்பற்றப்பட்டன.

மேலும், அக்டோபர் 28 ஆம் திகதி கல்லாரு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட 300 கடல் சங்குகள்(Sea Shank), ஒரு டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரனங்கள் கொண்ட 06 சந்தேக நபர்கள் வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 20 முதல் 57 வயதுடைய மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், டிங்கி படகுகள், தடைசெய்யப்பட்ட வலை, சுழியோடி உபகரனங்கள் மற்றும் வெடிபொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி காவல் நிலையம் மற்றும் மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் மற்றும் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடித்தல் மூலம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்க கடற்படை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்.