கடந்த சில நாட்களில் கடற்படை மற்றும் காவல்துறை மேற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், ஹெராயின், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு பெண் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளது.

">

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 10 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடந்த சில நாட்களில் கடற்படை மற்றும் காவல்துறை மேற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், ஹெராயின், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு பெண் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குச்சவேலி பொலிஸாருடன் இணைந்து குச்சவேலி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 02 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் ஹெராயின் கொண்ட ஒரு பெண் கைது செய்யப்பட்டார். மன்னார் சாலையில் சென்ற சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று புத்தலம் பகுதியில் சோதனை செய்த வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தலம் பிரதேச நச்சு போதை மருந்து தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அங்கிருந்து 01 கிராம் மற்றும் 500 மில்லிகிராம் ஹெராயின் கண்டுபிடித்தனர். பின்னர், குறித்த ஹெரோயின் போதை பொருளுடன் முச்சக்கர வண்டியில் சென்ற 05 நபர்கள் மற்றும் குறித்த முச்சக்கர வண்டி கைது செய்தனர். மேலும், புத்தலம் பொலிஸாருடன் இணைந்து நாகவில்லுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 45 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை (02) வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நீர்கொழும்பு எஸ்.பி. அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது , 02 கிராம் கேரள கஞ்சா மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் சுமார் 1000 ப்ரீகாபலின் காப்ஸ்யூல்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ஒரு சந்தேகநபர் குறித்த மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், நொரொச்சோலை பனியடிய பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 12 கிலோகிராம் மாவாவுடன் மற்றொரு சந்தேக நபரை வடமேற்கு கடற்படை கட்டளை கைது செய்தது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட பெண் உட்பட சந்தேக நபர்கள் 21 முதல் 41 வயதுக்குட்பட்ட பொடுவக்கட்டு, புத்தலம், தங்கொடுவ மற்றும் நொரொச்சோலை ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப்பொருள், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் குச்சவேலி, புத்தலம், கொச்சிகடை, மற்றும் நொரொச்சோலை காவல் நிலையங்களுக்கு மற்றும் புத்தலம் பிரதேச நச்சு போதை மருந்து தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.