ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட 05 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
கடந்த சில நாட்களில் கடற்படை, காவல்துறை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஆகியவை ஒருங்கினைந்து மன்னார், சாந்திபுரம், புல்மூட்டை ஜின்னபுரம், காலி ரயில் நிலையம் மற்றும் ரிச்மண்ட் கந்த ஆகிய இடங்களில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகள் மூலம் ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டன.
வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கினைந்து மன்னார், சாந்திபுரம் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 410 மிலி கிராம் ஹெராயின் விற்பனைக்கு வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், கிழக்கு கடற்படை கட்டளை புல்மூட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து புல்மூட்டை ஜின்னபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது 200 மிலி கிராம் ஹெராயின் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், தெற்கு கடற்படை கட்டளை மற்றும் ஹியாரே சிறப்பு பணிக்குழு காலி ரயில் நிலையம் மற்றும் ரிச்மண்ட் கந்த ஆகிய இடங்களில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 802 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 22 முதல் 26 வயது வரையிலான சாந்திபுரம், புல்மூட்டை, காலி மற்றும் பொலன்னருவை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்னார் மற்றும் புல்மூட்டை காவல் நிலையங்கள் மற்றும் காலி கலால் நிலையம் ஆகியவற்றில் ஒப்படைக்கப்பட்டனர்.