சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 142 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைது
வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளில் 2020 செப்டம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 142 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படை கைப்பற்றியது.
வெத்தலகேனி, வத்திராயன் கடல் பகுதியில் ஒரு சந்தேகத்திற்கிடமான கப்பலை வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கண்காணித்ததுடன், குறித்த சந்தேகத்திற்கிடமான கப்பல் வத்திராயன் கடற்கரைக்குள் நுழைய முயன்றபோது, 09 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 43 கிலோ மற்றும் 270 கிராம் கேரள கஞ்சா கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், குறித்த போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல அந்த நேரத்தில் கடற்கரையில் இருந்த மற்றொரு நபரும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.
மேலும், வட மத்திய கடற்படை கட்டளை இலுப்புகடவாய் கத்தலாம்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 24 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட சுமார் 98 கிலோகிராம் மற்றும் 780 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடித்தனர்.
தற்போதைய COVID-19 தொற்று சூழ்நிலையின் கீழ் சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் 02 சந்தேக நபர்களுடன் 142 கிலோ கிராம் கேரளா கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு டிங்கி ஆகியவற்றைக் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் 32 மற்றும் 42 வயதுடைய பேசாலை மற்றும் வத்திராயன் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பளை மற்றும் இலுப்புகடவாய் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.