புத்தலம், குரின்னம்வெட்டே பகுதியில், திருகோணமலை பேருந்து நிலையம் அருகில் மற்றும் சீதுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 12 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா வைத்திருந்த 06 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

">

கடற்படை நடவடிக்கைகள் மூலம் 12 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

புத்தலம், குரின்னம்வெட்டே பகுதியில், திருகோணமலை பேருந்து நிலையம் அருகில் மற்றும் சீதுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 12 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா வைத்திருந்த 06 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தீவு முழுவதும் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சுமார் 12 கிலோ கிராம் கேரளா கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் புத்தலம், குரின்னம்வெட்டே பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இன்று (2020 செப்டம்பர் 08,) வடமேற்கு கடற்படை கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். 2020 செப்டம்பர் 08 ஆம் திகதி திருகோணமலை பிரதேச நச்சு போதை மருந்து தடுப்பு பிரிவுடன் கிழக்கு கடற்படை கட்டளை நடத்திய மற்றொரு கூட்டு நடவடிக்கையின் போது, 500 கிராம் கேரா கஞ்சாவுடன் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் சந்தேக நபர்கள் திருகோணமலை பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், ராஜகிரிய போலீஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மேற்கு கடற்படை கட்டளை சீதுவ பகுதியில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் போது, 15 கிராம் கேரளா கஞ்சா மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் சுமார் 250 எண்ணிக்கையிலான ப்ரீகபலின் காப்ஸ்யூல்கள் (Pregabalin Capsules 150mg) வைத்திருந்த மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 21 முதல் 42 வயதுக்குட்பட்ட மதுரங்குலிய, முத்தூர், எரக்கண்டி, கிலிணொச்சி மற்றும் மாரவில பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சந்தேகநபர்கள் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா மற்றும் பிற கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் புத்தலம் பொலிஸ் நச்சு போதை மருந்து தடுப்பு பிரிவு, திருகோணமலை காவல் தலைமையகம் மற்றும் சீதுவ காவல்துறை நிலையத்தில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டன.