கடற்படை சமீபத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது முல்லைதீவு உதயார்கட்டு பகுதியில் மற்றும் மஹவெலி ஆற்றின் கடுகஸ்தொடை கஹல்ல பகுதியில் மணல் அகழ்வாராய்ச்சி இடத்தில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

">

கடற்படையின் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பல வெடிபொருட்கள் மீட்பு

கடற்படை சமீபத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது முல்லைதீவு உதயார்கட்டு பகுதியில் மற்றும் மஹவெலி ஆற்றின் கடுகஸ்தொடை கஹல்ல பகுதியில் மணல் அகழ்வாராய்ச்சி இடத்தில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கிலிணொச்சி சிறப்பு பணிக்குழு இணைந்து முல்லைதீவு உதயார்கட்டு பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 60 மிமீ மற்றும் 81 மிமீ கொண்ட 2 மோட்டார் குண்டுகள், 120 மிமீ கொண்ட 02 மோட்டார் குண்டுகள் 60 மிமீ கொண்ட 12 இல்லுமினேஷன் பாரா (Illumination Para) மோர்டார்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு மோட்டார் குண்டு மீட்டெடுக்க முடிந்தது. மேற்கு கடற்படை கட்டளை நடத்திய மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது, மஹவெலி ஆற்றின் கடுகஸ்தொடை கஹல்ல பகுதியில் மணல் அகழ்வாராய்ச்சி இடத்தில் 08 பாதுகாப்பு உருகிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 10 மீட்டர் நீளமான 07 பாதுகாப்பு உருகிகள் மற்றும் 8.5 மீட்டர் நீளமான 01 பாதுகாப்பு உருகி மீட்டெடுக்கப்பட்டன.

இவ்வாரு மீட்கப்பட்ட வெடிபொருட்களை கிலிணொச்சி பொலிஸ் சிறப்பு பணிக்குழு வெடிகுண்டு அகற்றும் பிரிவினால் பாதுகாப்புக்காக செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு உருகிகள் மேலதிக விசாரணைகளுக்காக கடுகஸ்தொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.