கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கினைந்து கடந்த தினங்களில் புத்தலம், சவீவபுர, பொடுவக்கட்டு, மன்னார் மற்றும் பல்லேமுனை பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐஸ், ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

">

கடற்படை நடவடிக்கைகள் மூலம் 05 சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்

கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கினைந்து கடந்த தினங்களில் புத்தலம், சவீவபுர, பொடுவக்கட்டு, மன்னார் மற்றும் பல்லேமுனை பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐஸ், ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, புத்தலம் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து வடமேற்கு கடற்படை கட்டளை, புத்தலம் சவீவ புர பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 04 கிராம் மற்றும் 500 மி.கி ஐஸ், 1 கிராம் மற்றும் 400 மி.கி ஹெராயின் மற்றும் 02 மின்னணு அளவுகள் வைத்திருந்த 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல், குச்சவவேலி காவல்துறையுடன் ஒருங்கிணைந்து கிழக்கு கடற்படை கட்டளை பொடுவக்கட்டு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த 02 கிராம் மற்றும் 300 மி.கி ஹெராயினுடன் ஒரு பெண்ணை கைது செய்தது.

மேலும், மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் நகரம் மற்றும் பல்லெமுனே பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்கள் 460 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் சுமார் 5 கிராம் மற்றும் 160 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 22 முதல் 53 வயதுக்குட்பட்ட புத்தலம், திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் போதைப்பொருள் மற்றும் கைப்பற்றப்பட்ட பிற பொருட்களை புத்தலம், குச்சவேலி மற்றும் மன்னார் காவல் நிலையங்களில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.