சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது
கடற்படை கடந்த வாரத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி ஒன்பது (29) நபர்களையும் அவர்களது மீன்பிடிபொருட்களும் கைது செய்தது.
கடந்த வாரத்தில், வடக்கு கடற்படை கட்டளை மூலம் வெத்தலகேனி கடல் பகுதியிலும் கிழக்கு கடற்படை கட்டளை மூலம் நோர்வே துடுவ, சல்பேயாரு, நயாரு மற்றும் கலு துடுவ ஆகிய கடல் பகுதிகளிலும், மட்டக்களப்பு களப்பு மற்றும் துடுவ பகுதிகளிலும் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் மற்றும் வைத்திருத்தல் மீன்பிடித் தொழிலில் மின்சார விளக்குகளைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 29 நபர்கள், 11 மீன்பிடிப் படகுகள் மற்றும் பிற மீன்பிடி சாதனங்களை கைது செய்தது.
மேலும், மன்னார் நரிவிலகுளம் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நரிவிலக்குளம் பொது கல்லறைக்கு அருகே 70 மி.மீ க்கும் குறைவான சுற்றளவு கொண்ட 600 சிப்பிகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைதீவு, மன்னார், கிலினொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மீன்வள இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.