சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 04 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலைத் ஒழிக்கும் தேசிய பணியில் பங்களிக்கும் கடற்படை, கடந்த வாரம் ஒரு பெண் உட்பட 04 சந்தேக நபர்களை நொரொச்சோலை, திருகோணமலை சீனா துறைமுகம் மற்றும் குச்சவேலி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்தது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கற்பிட்டி பொலிஸாருடன் இனைந்து நொரொச்சோலை பகுதியில் கூட்டு நடவடிக்கையொன்று மேற்கொண்டு சுமார் 1 கிராம் மற்றும் 780 மில்லிகிராம் ஹெராயின் கொண்ட இரண்டு (02) சந்தேக நபர்களை கைது செய்தனர். மேலும், கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் திருகோணமலை பொலிஸ் நச்சு போதைப்பொருள் பிரிவுடன் இனைந்து சீன துறைமுகம் பகுதியில் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு சுமார் 200 கிராம் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்தனர். புல்முட்டை சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து குச்சவேலி பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு நடவடிக்கையின் போது, சுமார் 200 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 22 முதல் 47 வயதுக்குட்பட்ட கல்முனை, மன்னார், சீனா துறைமுகம் மற்றும் குச்சவேலி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி, திருகோணமலை மற்றும் குச்சவேலி காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.