சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 03 நபர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் பருத்தித்துறைக்கு 03 கடல் மைல் (சுமார் 05 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் கொண்டு சென்ற 03 நபர்களை ஒரு டிங்கி படகுவுடன் 2020 ஆகஸ்ட் 13 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.
இலங்கை கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளையால் பருத்தித்துறை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் பிடித்த 4010 கடல் அட்டைகள் கொண்ட டிங்கி படகொன்று, 03 சந்தேகநபர்கள் மற்றும் மீன்பிடிபொருட்கள் கைது செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 19, 21 மற்றும் 23 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம், மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.