கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட மஞ்சள் மூட்டைகளுடன் சந்தேக நபர்கள் கடற்படையால் கைது
2020 ஆகஸ்ட் 11 அன்று சிலாபத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் (சுமார் 18 கி.மீ) தொலைவில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிராலரை பரிசோதித்த கடற்படையினர் குறித்த படகில் இருந்து நாட்டிற்கு கடத்தி வந்த மஞ்சள் மூட்டைகளுடன் 04 சந்தெகநபர்கள் கைது செய்தனர்.
கோவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக கடலில் இருந்து முழு அளவிலான ஆய்வை மேற்கொள்வது கடினம் என்பதால், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மஞ்சள் முட்டைகள் கொண்ட படகு மேலதிக விசாரணைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சளின் ஈரமான எடை சுமார் 6381 கிலோ கிராம் என குறிப்பிடத்தக்கது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளின் படி, கிருமி நீக்கம் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மேலதிக விசாரணைக்கு சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், கைது செய்யப்பட்ட படகில் இருந்த நான்கு சந்தேக நபர்களும் கடலில் இந்திய கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தாக நம்பப்படுவதால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், கப்பலில் இருந்த 04 சந்தேக நபர்களால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கடற்படையினர் இலங்கை கடலோர காவல்படை மற்றும் சிலாபம் பொலிஸாருடன் இணைந்து சிலாபம் நகர பகுதியில் மற்றொரு சோதனையை மேற்கொண்டுள்ளதுடன், அங்கு ஒரு மினிவேன் மற்றும் 2,242,500.00 ரூபா பணத்துடன் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 முதல் 66 வயது வரையிலான வத்தலை, கடுகஸ்தோட்டை, கண்டி, பேருவல மற்றும் தொடுவாவ பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் படகில் உரிமையாளரும் இருக்கின்றார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பொருட்கள் மெலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படை மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றொரு கடத்தல்காரர்களை இவ்வாரு கைது செய்ய முடிந்ததுடன் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
|