கடற்படையின் சோதனை நடவடிக்கைகளினால் நான்கு சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2020 ஜூலை 24 ஆம் திகதி வட மத்திய மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளைகளில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளின் போது, 09 கிலோவிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்ததாக 04 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான மன்னார் உசிமுக்கந்துராய் பகுதியில் உள்ள கடலோர கண்காணிப்புப் சாவடியில் கடமையில் இருந்த கடற்படையினர்கள் குழு இறால் அடைப்புக்கு (ஜா-கோட்டு) அருகே மிதக்கும் சந்தேகத்திற்கிடமான 02 பொட்டலங்களைக் கண்கானித்தனர். குறித்த பொட்டலங்களை பரிசோதனை செய்த போது 9 கிலோ கிராம் மற்றும் 300 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கேரள கஞ்சா மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், அதே கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மெதவச்சி பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகளுடன் இனைந்து மெதவச்சி பேருந்து நிலையத்தில் நடத்திய மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய மட்டக்களப்பு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மெதவச்சி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவுடன் இனைந்து மன்னார் எலுத்துரை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 560 மில்லிகிராம் ஹெராயின் வைத்திருந்த ஒரு சந்தேக நபர் கடற்படையால் கைது செய்யப்பட்டது. குறித்த சந்தேக நபர் மன்னார் பகுதியில் வசிக்கும் 21 வயதான இளைஞராக அடையாளம் காணப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கலவஞ்சிகுடி பொலிஸ் அதிரடிப் படையினர் இனைந்து 2020 ஜூலை 24, அன்று மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று சோதனை செய்தனர். அங்கு சுமார் 670 மிலிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் 43 வயதான குறித்த சந்தேக நபர் அதே பகுதியில் வசிப்பவர் என்றும், போதைப்பொருளை விற்பனைக்கு எடுத்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர், ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.