நடவடிக்கை செய்தி

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கிழக்குக் கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரைக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்புவதற்கு கடற்படையின் உதவி

இலங்கைக்கு கிழக்கே திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை உடனடியாக வெளிநாட்டு கப்பலின் பங்களிப்புடன் தரையிறக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் 2025 பெப்ரவரி 06 அன்று அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

06 Feb 2025

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆபத்தான மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையின் உதவி

இலங்கைக்கு தெற்கு ஆழ்கடலில், காலியில் இருந்து 43 கடல் மைல் (சுமார் 79 கி.மீ) தொலைவில் சுகவீனமடைந்த, மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர் ஒருவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று இன்று (2025 பெப்ரவரி 06) சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.

06 Feb 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற விலங்குகள் மற்றும் மருந்துகளுடன் மூவர் மன்னாரில் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் 2025 பெப்ரவரி 04 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற புறாக்கள் (PIGIONS) , ஆபிரிக்க காதல் பறவைகள் (AFRICAN LOVE BIRDS), பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) மற்றும் மருந்து தொகைகளுடன் பயணித்த லொறி ஒன்றுடன், மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Feb 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் கப்பல் ஒன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி இரவு, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் பத்து (10) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

03 Feb 2025

101 சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் கந்தலையில் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி கந்தலை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த நூற்றி ஒரு (101) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

02 Feb 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 515 பாதணிகள் என்பன நொரோச்சோலையில் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் நொரோச்சோலை ஆலங்குடா கடற்பகுதியில் 2025 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி, மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட முட்பட்ட சுமார் 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் சுமார் 515 ஜோடி காலணிகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

02 Feb 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1670 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் நீர்கொழும்பு கெபும்கொட பகுதி கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து அறுநூற்று எழுபது (1670) கிலோ (500) கிராம் பீடி இலைகள் கொண்ட டிங்கி படகு (01) ஒன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

02 Feb 2025

நவதன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படை, மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து 2025 ஜனவரி 31 ஆம் திகதி பத்துலு ஓயாவின் நவதங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராமுடன் ஒரு (01) சந்தேக நபரும் ஒரு (01) மோட்டார் சைக்கிளும் கைது செய்யப்பட்டது.

01 Feb 2025

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க கப்பல் நிலையத்தில் இருந்த கொள்கலனில் ஏற்பட்ட திடீர் தீயை அனைப்பதற்கு கடற்படையின் உதவி

கொழும்புத் துறைமுகத்தின் பண்டாரநாயக்க கப்பல் நிலையத்தின் நான்காவது முற்றத்தில் (BQ4) இருந்த கொள்கலனில் ஏற்பட்ட திடீர் தீயை அனைப்பதற்கு மேற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த தீயணைப்புக் குழுவின் உதவியை 2025 ஜனவரி 30 அன்று இரவு கடற்படையால் வழங்கப்பட்டது.

31 Jan 2025

தலைமன்னாரில் 3,492 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மற்றும் விமானப்படையினர் இணைந்து 2025 ஜனவரி 27 ஆம் திகதி தலைமன்னார் பேசாலை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் மூவாயிரத்து நானூற்று இரண்டு (3,492) சங்குகளுடன், சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

28 Jan 2025