கடற்படை தாதி கல்லூரியில் தாதி பாடநெறியை முடித்த 41 பேர் தாதி உறுதிமொழியை வழங்கினர்
சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 41 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் தொப்பி அணிவிப்பு மற்றும் தாதியர் உறுதிமொழி வழங்கும் விழா இன்று (2023 மே 15) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார கல்லூரியின் பீடாதிபதி திரு. எஸ்.எஸ்.பீ வர்ணகுலசூரிய அவர்கள் கலந்து கொண்டார்.
அதன் படி, இங்கு 31 கடற்படை தாதிகளுக்கு மற்றும் 10 விமானப்படை தாதிகளுக்கு தொப்பிகள் அணித்தல் மற்றும் விளக்குகள் வழங்குதல் சுகாதார அமைச்சின் இயக்குநர் (தாதி கல்வி) திருமதி அசோகா அபேநாயக்க, இயக்குநர் (தாதி மருத்துவ சேவைகள்) திருமதி எம்.பி.சி சமன்மலி, இலங்கை தாதியர் பேரவையின் தலைவர் மற்றும் பதிவாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடங்களின் விரிவுரையாளர்கள், கந்தானை, கொழும்பு மற்றும் களுத்துறை தாதியர் கல்லூரிகளின் அதிபர்கள், சிரேஷ்ட தாதி விரிவுரையாளர்கள் மற்றும் விசேட தர பிரதான தாதியர்களால் நிகழ்த்தப்பட்டது.
இதேவேளை, முதலாம் அரையாண்டு பரீட்சையில் பல்வேறு பாடங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற தாதியர் மாணவிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் சிறப்புப் பதக்கங்களை வழங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில், கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க மற்றும் ஏனைய பணிப்பாளர் நாயகங்கள், பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் கொமடோர் பி.ஜே.பி.மரம்பே, கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.