கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்
வட மத்திய கடற்படை கட்டளைக்கு 2023 மே மாதம் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த கட்டளையின் செயற்பாட்டுத் தயார்நிலை, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் நலன்புரி வசதிகள் குறித்து கவனம் செலுத்தியதுடன் கடற்படையின் எதிர்கால நோக்கங்கள், செயல்பாட்டு தயார்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களின் மேலாண்மை குறித்து வட மத்திய கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கூறினார்.
இதன்படி, வருகை தந்த கடற்படைத் தளபதியை வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிருவனத்தில் கடற்படை அதிகாரிகள் குழுவிடம் உரையாற்றினார். மேலும், அவர் இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிருவனத்தில் மாலுமிகளை உரையாற்றினார்.
கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு ஆற்றிய உரையில், நாடு எதிர்கொள்ளும் கடினமான காலப்பகுதியிலும், கடற்படையின் பிரதான கடமையான சமுத்திரத்தின் ஊடாக நாடு எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கு கடற்படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு கடற்படையின் பொறுப்பை அதிகபட்ச பலத்துடன் நிறைவேற்ற அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் அர்ப்பணிப்பை கடற்படை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
போர்க்காலமொன்று இல்லையென்றாலும், சமுத்திரத்தில் மரபுக்கு மாறான கடல்சார் சவால்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், நாட்டின் முன் எழக்கூடிய வேறு சவால்களை எதிர்கொள்ளவும் இராணுவ வீரர்களாகத் தயாராக இருப்பது அவசியம் என்றும் அதற்குத் தேவையான ஆள்பலத்தைப் பேணுவது அவசியம் எனத் தெரிவித்த கடற்படைத் தளபதி, நாடு சவாலான காலகட்டத்தை கடந்து செல்வதாகவும், பொருளாதார சவால்களை முறியடித்து படிப்படியாக மீள்வதாகவும், சமூக அரசியல் தாக்கங்களால் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தினார்.
அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் தங்கள் குடும்பத்தில், பாடசாலையில் மற்றும் சமுதாயத்தில் கட்டமைக்கப்பட்ட நல்ல பண்பு மற்றும் தலைமைப் பண்புகளை மேலும் மேம்படுத்திக்கொன்று கடற்படை முறைமையை முறையாகப் பேணி, சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்படுவதைத் தவிர்த்து நல்ல திசையில் தலைமைத்துவத்தை வழங்குவது அவசியமானது என கடற்படைத் தளபதி தெரிவித்தார். கடந்த காலங்களில் கடலில் இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கடற்படையினரால் குழு உணர்வுடன் செயற்பட்டதன் மூலம் வெற்றிகரமாக வெற்றியீட்டியதாகவும், அந்த குழு உணர்வுடன் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள முடியும் எனவும் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். அதற்காக கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் நலன்புரித் திணைக்களத்தினால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகையை உயர்த்தி கடற்படை வீரர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார். அத்துடன், தமது தனிப்பட்ட நிதி விவகாரங்களை சிறந்த முகாமைத்துவத்துடன் நடத்துவதும் வருமானத்திற்கு ஏற்ப செலவினங்களைக் கட்டுப்படுத்துவதும் இன்றியமையாதது எனவும் கடற்படைத் தளபதி மேலும் வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின் போது கடற்படைத் தளபதி இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் கடற்படை காலாட்படை பாடசாலையில் நிறுவப்பட்ட துப்பாக்கிச்சூடு தளத்தில் பயிற்சிச் சமூகத்தின் செயல்பாட்டினை பார்வையிட்டார். மேலும், இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தில் உள்ள நலன்புரி விற்பனை நிலையம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தில் பயிற்சி பெற்ற கடற்படையினரின் நலன்புரி வசதிகள் பார்வையிட்டு அந்த வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.