ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் பெரஹெர கடற்படையினரின் பங்களிப்புடன் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
2567 வது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரயை மையமாக கொண்டு நடைபெறுகின்ற புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் 2023 மே மாதம் 06 ஆம் திகதி இரவு பெரஹெர ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் அனுநாயக்க வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் அறிவுரைப்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் கட்டளைப்படி கடற்படை பௌத்த சங்கத்தின் அனுசரணையில் வண்ணமயமாக நடத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி, கங்காராம விகாரையில் இருந்து வண்ணமயமான பெரஹெர மூலம் விகாரைக்கு கொண்டு வரப்பட்ட உற்சவ கலசம், பௌத்த முறைப்படி விகாரையில் சீமா மாலகத்தில் வைக்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் பக்தி பரவசத்துடன் செய்யப்பட்டது. பெரஹெர முடிவில், அறிவுரை வழங்கிய வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் இவ்வருடம் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.
மேலும், 2023 மே மாதம் 06, ஆம் திகதி இரவு, புத்த ரஷ்மி வெசாக் வலயத்தில் இலங்கை கடற்படையின் பங்கேற்புடன் நடைபெற்ற புத்த பாடல்கள், அலங்கார மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை பார்வையிட, கடற்படை தளபதியுடன் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி. மாலா லமாஹேவா அவர்கள் கடற்படையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் மற்றும் கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.