‘வழங்கள் கருத்தரங்கு - 2023’ மற்றும் 07வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
‘வழங்கள் கருத்தரங்கு - 2023’ மற்றும் 07வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி மற்றும் இன்றய திகதி (2023 ஏப்ரல் 30) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் இந்த ‘வழங்கள் கருத்தரங்கின் பிரதம அதிதியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசிங்க அவர்கள் கழந்துகொண்டார்.
இந்த வருடத்திற்கான வழங்கல் கருத்தரங்கின் கருப்பொருள் ‘From value chain to value network: the role of integrated logistics’ என்பதானதுடன் இந்த மாநாடு மூன்று அமர்வுகளாக இடம்பெற்றது, இதன் போது 07 வது நீட்டிக்கப்பட்ட தளவாட மேலாண்மை பாடத்திட்டத்தின் அதிகாரிகளால் ஆறு (06) ஆராய்ச்சி ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதன்படி, முதல் அமர்வு “Integrated Logistics as a means to overcome contemporary challenges” என்ற கருப்பொருளின் கீழும், இரண்டாவது அமர்வு “The evolution of value creation in Logistics on sustainable supply network” என்ற கருப்பொருளின் கீழும், மூன்றாவது அமர்வு “Achieving supply chain visibility through digitalization & integrated logistics” என்ற கருப்பொருளின் கீழும் நடைபெற்றது.
இந்த வழங்கல் மாநாட்டின் பிரதான உரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசிங்கவினால் நிகழ்த்தப்பட்டதுடன், மாநாட்டின் மின்னிதழையும் பிரதம அதிதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், இந்த வழங்கல் கருத்தரங்கின் இறுதியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 07வது நீடிக்கப்பட்ட வழங்கல் முகாமைத்துவ பாடநெறியை பயின்ற உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அங்கு லெப்டினன்ட் கமாண்டர் மதுஷிகா கத்ரியாராச்சி இந்த பாடநெறியின் கடற்படை பாடங்களில் அதிக புள்ளிகள் பெற்ற அதிகாரியாவும் லெப்டினன்ட் கமாண்டர் மேனுக சமரஜீவ இந்த பாடநெறியை மிகவும் ஆர்வத்துடன் முடித்த அதிகாரியாகவும் பரிசுகள் மற்றும் கோப்பைகள் பெற்றனர்.
இங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி, வழங்கல் மற்றும் சேவை நடவடிக்கைகள் நவீன தொழில்நுட்பத்துடன் தானியங்கு அமைப்புகளை நோக்கிச் செல்லும் இக் காலத்தில் விநியோக நிர்வாகத்தின் துல்லியம் அதன் செயல்திறனுக்கஞ பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, இவ்வருடம் மிகவும் தலைப்பிலான தொனிப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த மாநாடு வழங்கல் துறையில் தற்போதைய சவால்களை கண்டறிவதற்கு மிகவும் முக்கியமானது எனவும், பிரபல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படும் இத்தகைய மாநாடுகள் மற்றும் விநியோகத் துறையில் பங்குதாரர்கள், விநியோக நிர்வாகத்தை மேம்படுத்துவார்கள், சவால்களைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை கூட்டாகக் கண்டறிவது ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது என்றும் கூறினார்.
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி கொமடோர் புத்திக லியனகமகேவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 07 வது நீண்ட விநியோக முகாமைத்துவ பாடநெறியின் அதிகாரிகளால் பீடத்தின் ஊழியர்களின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்குக்காக கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் இலங்கை தன்னார்வ கடற்படைத் தளபதி, ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, பணிப்பாளர் நாயகம் வழங்கள் மற்றும் சேவைகள், ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க உட்பட பணிப்பாளர் நாயகங்கள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படைத் தலைமையகம் மற்றும் கடற்படைத் கட்ளைகளின் வழங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் தலைவர்கள், இராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், பங்களாதேஷ் கடற்படையின் கொமடோர் S.M. Zamil Hossain, மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.