நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லுரியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கையில் ஆய்வு சுற்றுப்பயணமொன்று மேற்கொண்டுள்ள நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லுரியின் மாணவ அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் தூதுக்குழு இன்று (2023 ஏப்ரல் 24) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.
நைஜீரியாவின் அபுஜா (Abuja) நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லுரியின் 31வது பணியாளர் படிப்பை படிக்கின்ற 13 மாணவ அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களை உள்ளடக்கிய இந்த 24 உறுப்பினர்களின் தலைவராக எயார் கமடோர் Osichinaka Chedu UBADIKE பணியாற்றுகிறார்.
அதன்படி, இலங்கைக்கு வருகை தந்த இந்த தூதுக்குழுவின் தளபதி எயார் கமடோர் Osichinaka Chedu UBADIKE மற்றும் இந்தியாவில் உள்ள நைஜீரிய தூதரகத்துடன் இணைந்து இலங்கையிலும் செயல் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரியும் கர்னல் AO Salami உட்பட தூதுக்குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர். அதன் பின்னர், தேசிய பாதுகாப்பு கல்லுரியின் 31வது பணியாளர் படிப்பை படிக்கின்ற மாணவ அதிகாரிகள் இலங்கை கடற்படையின் செயல்பாடுகள் பற்றிய விரிவுரையில் கலந்து கொண்டனர்.
மேலும், கடற்படை தளபதி மற்றும் நைஜீரிய தூதுக்குழுவின் தளபதி இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த நைஜீரிய தூதுக்குழு நாட்டில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், இலங்கையின் முக்கிய இடங்களுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.