சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் பங்களிப்புடன் சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது
2023 மார்ச் 08 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா ஆகியோர் தலைமையில் இன்று (2023 மார்ச் 11) வெலிசறை கடற்படை வளாகத்தில் விசேட மகளிர் தின நிகழ்ச்சியொன்று நடத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சகம் 2023 மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தின் பிரதான நிகழ்வு "அவள் தேசத்தின் பெருமை" என்ற கருப்பொருளின் கீழ் நடத்தியது. இந்த பிரதான நிகழ்விற்கு இணையாக, கடற்படையில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கடற்படை சேவா வனிதா பிரிவு இந்த விசேட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் தகவல் விரிவுரைகள், சமையல் மற்றும் அழகு கலாச்சார பிரிவுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன, இது பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் மனைவிகளின் அறிவை மேம்படுத்தும் வகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கடற்படை தளபதி அவர்கள் விழாவில் உரையாற்றியதுடன் கடற்படையின் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் மாலுமிகள் பல்வேறு துறைகளில் ஆற்றி வரும் பணிகளை பாராட்டினார். மேலும் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, ஆண் மாலுமிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பல்வேறு துறைகளை பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகளுக்கு திறந்துள்ளதுடன், எதிர்காலத்தில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் மாலுமிகளுக்கும் கடல் கடமைகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றார். கடற்படையின் பாரிய பொறுப்புகளை சுமந்துகொண்டு ஆண் மாலுமிகளுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றக்கூடிய பணிச்சூழலை கடற்படை உருவாக்குவதாகவும், இதன் மூலம் கடற்படையினரால் நாட்டுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும், தாயாக, மனைவியாக, மகளாக, தோழியாக அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்குப் பின்னால் பெண்களே பெரும் பலமாக இருப்பதாகத் தெரிவித்த கடற்படைத் தளபதி, பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகள், மாலுமிகளின் மனைவிகள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் தமது பொறுப்பை நிறைவேற்றுவது பாராட்டுக்கு உரியது என்றும் கூறினார்.
இங்கு, பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.மனோஜ் சமரசேகர, பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அதுக்கான சமூக ஊடகங்களின் தாக்கம் தொடர்பாகவும் மருந்துவ கேப்டன் அப்சரா ஹெனகம உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியம் குறித்தும் திருமதி தமலி வாசல அழகு பற்றியும் முக்கிய விரிவுரைகளை வழங்கினார்கள். மேலும், கடற்படை சேவா வனிதா பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்த நிகழ்ச்சியில் மருத்துவம், சட்டம், நிதி மற்றும் அழகு தொடர்பான கள கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இந் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா உட்பட கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை சேவா வனிதா பிரிவின் உப தலைவி உட்பட செயற்குழு உறுப்பினர்கள், சிரேஷ்ட மற்றும் பென் அதிகார்கள், மூத்த மற்றும் இளைய பெண் மாலுமிகள் மற்றும் சேவா வனிதா உறுப்பினர்கள் குழு கலந்துகொண்டனர்.