பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினார்
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக 2023 பெப்ரவரி 25 ஆம் திகதி இலங்கைக்கு வந்த அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Admiral Muhammad Amjad Khan Niazi) தனது நான்கு நாள் (04) உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (பிப்ரவரி 28, 2023) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பாகிஸ்தானுக்குப் புறப்பட்டார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி, நாட்டின் பாதுகாப்புத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், தீவின் முக்கிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட முப்படை தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதி கௌரவ. ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இவ்வாரு சந்தித்து கலந்துரையாடினார். மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் விஜயம் செய்தார், அங்கு அவர் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியை சந்தித்துடன் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கும் விஜயம் செய்தார்.
பாகிஸ்தான் கடற்படைத் தளபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்துடன் இணைந்து, கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் தலைமையின் கீழ், பாகிஸ்தான் கடற்படைத் தளபதியின் மனைவி திருமதி அமிரா அம்ஜத் அவர்களுக்கு கடற்படை சேவை வனிதா பிரிவினால் விசேட நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், பிராந்திய கடற்படைத் தலைவர்களின் இத்தகைய உத்தியோகபூர்வ விஜயங்களால் மேம்படுத்தப்படும் ஒத்துழைப்பு எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை தடுக்க பெரும் உதவியாக இருக்கும்.