ஒத்துழைப்பு, தயார்நிலை மற்றும் பயிற்சிக்கான கடற்படை பயிற்சி (CARAT–2023) வெற்றிகரமாக நிறைவடைந்தது
ஐக்கிய அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல்கள் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டிற்காக நடத்தப்பட்ட ஒத்துழைப்பு, தயார்நிலை மற்றும் பயிற்சிக்கான கடற்படை பயிற்சி (Cooperation Afloat Readiness and Training Exercise - CARAT–23) 2023 ஜனவரி 19 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 25, வரை கொழும்பு, திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் பகுதிகள் மையமாக கொண்டு நடைபெற்றதுடன் இன்று (ஜனவரி 26, 2023) குறித்த பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அதன்படி, இன்று (2023 ஜனவரி 26,) கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள USS Anchorage கப்பலில் நடைபெற்ற CARAT - 2023 பயிற்சியின் நிறைவு விழா இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கௌரவ திருமதி ஜூலி சாங், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் (U.S. 7th Fleet) துணைத் கட்டளை அதிகாரி Rear Admiral Joaquin J. Martinez de Pinillo தலைமையிலும், திருகோணமலை கடற்படைத் தளத்தில் நடைபெற்ற நிறைவு விழா கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார மற்றும் அமெரிக்க கடற்படையின் Lieutenant Max Cutchen தலைமையிலும், மொல்லிக்குளத்தில் இடம்பெற்ற நிறைவு விழா 2023 ஜனவரி 25 ஆம் திகதி ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் மற்றும் அமெரிக்க 4வது மரைன் படைப்பிரிவின் இரண்டாவது படையணியின் கட்டளை அதிகாரி கேப்டன் ஷான் மன்ட்ரயார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் நினைவுப் சின்னங்களும் பரிமாற்றப்பட்டன.
இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை CARAT - 2023 இருதரப்பு பயிற்சியில் பங்கேற்றன, இது சுதந்திரமான இந்து-பசிபிக் பிராந்தியத்தை பேணுதல், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் பங்காளித்துவத்தை பேணுதல் மற்றும் பலப்படுத்துதல் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை (Japan Maritime Self-Defense Force) மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் (Maldives National Defence Force) குழு இந்தப் பயிற்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
இந்த பயிற்சி தரை மற்றும் கடல் கட்டளை அடிப்படையில் இரண்டு (02) கட்டளைகளின் கீழ் நடத்தப்பட்டதுடன் அதன் கடல் கட்டளைக்காக அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் கஜபாஹூ, சமுதுர ஆகிய ஆழ்கடல் தாக்குதல் கப்பல்கள் இணைந்தது. கடல்சார் களத்தின் போது போர்க்கப்பல்கள் தந்திரோபாய வடிவங்களில் நகர்கின்ற பயிற்சிகள் ((Divisional Tactics - DIVTACs), கடல் மற்றும் வான் வழியாக கப்பல்களுக்கு மற்றும் படகுகளுக்கு அணுகுதல், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் பயிற்சிகள் (Visit Board Search & Seizure - VBSS/ Helicopter Visit, Board, Search and Seizure – HVBSS), கப்பல்களுக்கு இடையே கடலில் பொருட்களை பரிமாறிக்கொள்ள கப்பல்களை தயார்படுத்தல், (Replenishment at Sea - RAS), வான்வழி உளவு நடவடிக்கைகள் (Overhead Reconnaissance), ஹெலிகாப்டர்கள் மூலம் கப்பல்களுக்கு இடையே பொருட்கள் மற்றும் பணியாளர்கள் பரிமாற்றம், பகல், இரவு மற்றும் வான்வழி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் (GUNEX), கடற்படை போர் வடிவங்கள் புகைப்படம் எடுத்தல் (PHOTOEX), போர்க்கப்பல்களுக்கு இடையே மரியாதை செலுத்துதல் (Steam Past) வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
CARAT– 2023 இருதரப்பு கடல் பயிற்சியின் நில கட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சிகள் (Marine Exercise - MAREX) முள்ளிக்குளம் கடல் மற்றும் கடற்கரையை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது, அங்கு போரின் போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வசதிகள் வழங்குதல் (Tactical Combat Casualty care - TCCC) மற்றும் போரின் போது உயிர்காக்கும் பயிற்சிகள் (Combat Life Saving - CLS) வனப் பகுதி போர் மற்றும் நகர்ப்புற நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் (Military Operation in Urban Terrain – MOUT & Rescue Operation), மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பயிற்சிகள் (Humanitarian Assistance & Disaster Relief), வனப் பயிற்சிகள், பகல் மற்றும் இரவு ரோந்து மற்றும் பதுங்கியிருத்து தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் தற்காப்புப் போர் போன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டன, இதற்காக அமெரிக்காவின் மரைன் படையணியுடன் இலங்கை கடற்படை மரைன் படையணி, கடற்படை சிறப்பு படகுகள் படை, கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படை மற்றும் மரைன் காலாட்படை பிரிவு ஆகியவை கலந்துகொண்டன.
CARAT– 2023 இருதரப்புப் பயிற்சியில், சிறப்பு படகுகள் படையின் செயல்பாட்டுப் பயிற்சிகள், சுழியோடி மற்றும் மீட்புப் பயிற்சிகள் திருகோணமலை கடற்படைத் தளத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன. வெடிப் பொருட்களை அகற்றும் பயிற்சிகள் (Explosive Ordnance Disposal Exercise), சுழியோடி மற்றும் மீட்பு பயிற்சிகள் (Diving and Salvage Exercise), ஆறுகள் தொடர்பான பயிற்சிகள் (Revering Exercise), கடற்படை வெடிகுண்டுகளை அகற்றும் பயிற்சிகள், ஆளில்லா வான்வழி வாகன அமைப்பு சம்பந்தப்பட்ட பயிற்சிகள் (Small Unmanned Aircraft System - SUAS) ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மேலும், CARAT – 2023 பயிற்சியுடன் இணைந்து கடல்சார் சட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் பெண்களின் பங்கு பற்றிய கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு, கலாச்சார மற்றும் தகவல் பரிமாற்றங்கள் மூலம் உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள் அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகளின் பங்களிப்புடன் நடைபெற்றன.
உலகின் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தும் அமெரிக்க கடற்படை, கடல்சார் நடவடிக்கைகளில் கப்பல்களுக்கு இடையே தகவல் தொடர்புகளை நடத்துவதிலும், கடல்சார் தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கடல்சார் நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைத்து, இலங்கை கடற்படையின் எதிர்கால செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதிலும் அனுபவம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பாரம்பரியமற்ற கடல்சார் அச்சுறுத்தல்கள் உட்பட பொதுவான கடல்சார் சவால்களை அபிவிருத்தி செய்வதற்கும் வெற்றிகொள்வதற்கும் இத்தகைய பயிற்சிகள் மூலம் பரிமாறப்படும் புதிய அறிவு திறன்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு மூலம் இலங்கை கடற்படைக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மேலும், இந்நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள், இராஜதந்திர அதிகாரிகள், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு. சாகல ரத்நாயக்க, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், இலங்கை இராணுவத் தளபதி. லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன உட்பட முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.