P 627 என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இலங்கை நோக்கிச் செல்லும் வழியில் சிங்கப்பூரின் சாங்கி (Changi) துறைமுகத்தை வந்தடைந்தது
2022 செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கிய P627 ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல், 2022 அக்டோபர் 22 ஆம் திகதி காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்த நிகழ்வில் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி சசிகலா பிரேமவர்தனவும் கலந்து கொண்டார்.
P627 கப்பல் பிலிப்பைன்ஸின் மணிலா துறைமுகத்தில் இருந்து தேவைகளைப் பெற்றுக்கொண்டு, 2022 அக்டோபர் 16 ஆம் திகதி இலங்கைக்கு புறப்பட்டு, சுமார் 1,393 கடல் மைல்கள் (சுமார் 2,580 கி.மீ.) பயணத்திற்குப் பிறகு, 2022 அக்டோபர் 22, ஆம் திகதி இவ்வாரு சிங்கப்பூரில் உள்ள சாங்கி துறைமுகத்தை வந்தடைந்தது.
மேலும், P627 என்ற கப்பல் சிங்கப்பூர் சாங்கி துறைமுகத்தை வந்தடையும் நிகழ்வில் கலந்துகொண்ட சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி சசிகலா பிரேமவர்தன, P627 கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திசாநாயக்கவைச் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
P 627 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கிய நீண்ட பயணத்தின் போது 9093 கடல் மைல்கள் (சுமார் 16840 கிலோமீட்டர்கள்) தூரம் பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் வழியாக 50 நாட்கள் சென்றடைந்துள்ளது. மேலும், இந்த கப்பல் 2022 நவம்பர் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.