உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் விசேட நிகழ்ச்சிகள்
வருடாந்தம் ஒக்டோபர் 01 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் 2022 ஒக்டோபர் 02 ஆம் திகதி சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சியொன்றை இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பது அனைவரினதும் கடமை என்பதை கருத்திற்கொண்டு, 'புன்னகை - எமது உலகம்' என்ற தொனிப்பொருளில் இவ்வருட உலக சிறுவர் தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டன. அதன்படி, உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை கப்பலான கஜபாஹு கப்பலில் கடற்படையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் கலந்து கொண்டு கஜபாகு கப்பலை சுற்றிப்பார்த்ததுடன், கப்பலில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. கடந்த உலக சிறுவர் தின நிகழ்ச்சிகளில் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல்களை பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளதுடன், இம்முறை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. கஜபாகு கப்பலைப் பார்க்கவும், கப்பலின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளவும் இது மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன், காலி முகத்திடல் ஹோட்டல் மற்றும் ஈபர்ட் சில்வா நிருவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இவ்வருட உலக சிறுவர் தினத்திற்காக இலங்கை கடற்படை கப்பலான கஜபாஹு கப்பலை பார்வையிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.