இலங்கை கடற்படையில் புதிதாக இணைந்த P 627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.

அமெரிக்கா கடலோரக் காவல்படையினரால் இலங்கை கடற்படையிடம் 2021 ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல், இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து அதன் புதிய இல்லமான கொழும்பு துறைமுகத்தை நோக்கி 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி பயணம் தொடங்கியது.

அமெரிக்காவின் கடலோர காவல்படை திணைக்களத்திற்கு சொந்தமான 'டக்ளஸ் முன்ரோ' (EX USCGC Douglas Munro) என்ற அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையிடம் P627 என்ற பென்னன்ட் இலக்கத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதுடன் கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர் அதிகாரமளிக்க உள்ளது. ‘Hamilton Class High Endurance Cutter’ வகையின் சேர்ந்த இரண்டாவது கப்பலாக இலங்கை கடற்படையில் இணைந்த இந்தக் கப்பல் 115 மீற்றர் நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 29 கடல் மைல் வேகமும், ஒரே நேரத்தில் குறைந்தது 14000 கடல் மைல் தூரம் இடைமறிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மேலும், 187 குழுவினரை கொண்ட இக் கப்பல் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தக் P627 கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படையின் குளுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப தேவையான தொழில்நுட்ப மற்றும் நவீன சாதனங்களைச் சேர்த்து நவீனப்படுத்தி, அதன் புதிய இல்லமான கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்காவில் உள்ள சியாட்டில் துறைமுகத்தில் இருந்து 2022 செப்டம்பர் 03 அன்று உள்ளூர் நேரப்படி 0900 மணிக்கு புறப்பட்டது.

சுமார் 02 மாதங்கள் நீடித்த கடல் பயணத்திற்குப் பிறகு P 627 கப்பல் 2022 நவம்பர் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சியாட்டிலில் இருந்து கொழும்புக்கு வரும் போது, அமெரிக்கா ஹவாயின் ஹொனலுலு (Honolulu) துறைமுகம், அமெரிக்காவின் குவாம்யில் (Guam) அப்ரா (Apra) துறைமுகம், பிலிப்பைன்ஸில் மணிலா (Manila) துறைமுகம் மற்றும் சிங்கப்பூரில் சாங்கி (Changi) துறைமுகம் ஆகியவையில் பொருட்கள் மற்றும் சேவை தேவைகளுக்காக செல்லும்.

மேலும், கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிப்பதற்கான கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்க கடலோர காவல்படை இலங்கை கடற்படைக்கு இதற்கு முன் 'சமுதுர' (பி 621) மற்றும் 'கஜபாஹு' (பி 626) ஆகிய கப்பல்களை வழங்கியுள்ளது. இந்த 'P627' கப்பல், அந்த கூட்டுறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட மூன்றாவது கப்பலாகும்.