பொதுநலவாய விளையாட்டுகள் 2022” யில் இலங்கை கடற்படை விளையாட்டு வீராங்கனை கயந்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனை
ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஆகஸ்ட் 02) நடைபெற்ற “காமன்வெல்த் விளையாட்டு 2022” போட்டிகளில் பெண்களுக்கான 800 மீ ஓட்டப்`போட்டியில் இலங்கை கடற்படையின் பெண் சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.
அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் பூர்வாங்கச் சுற்றில் 02 நிமிடம் 01.20 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து இதுக்கு முன் 2022 ஆம் ஆண்டில் நூற்றாண்டு கொண்டாட்ட தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 02 நிமிடம் 01.44 வினாடிகளில் ஓடி முடித்த தனது சொந்த முந்தைய தேசிய சாதனையான முறியடித்தார்.
அவர் 800 மீ, 1500 மீ மற்றும் 5000 மீ போட்டிகளிளும் தேசிய சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டில், தாய்பேயில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான 800 மீ ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஓட்டப்போட்டியில் 800 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 2017 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், 2019 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 x 4 மீட்டர் பெண்கள் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டில் வெள்ளிப் பதக்கம், 2019-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதன்படி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விளையாட்டு சாதனைகளை படைத்துள்ள பெண் சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன, 2021 ஆம் ஆண்டு தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் தடகளப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்து இலங்கை கடற்படைக்கு பெரும் புகழைக் கொண்டு வந்தார். அதன் படி குறித்த விராங்கனை பாராட்டும் வகையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 2021 நவம்பர் 02 அன்று பெண் சிறு அதிகாரியாக பதவி உயர்வு வழங்கினார்.
மேலும், கடற்படையின் தடகள அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டி, 2021ல் நடைபெற்ற கடற்படை வண்ண விருது விழாவில் சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை வழங்குவதற்கும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
ජායාරුප අනුග්රහය - ශ්රි ලංකා ජාතික ඔලිම්පික් කමිටුව