பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன் ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சம்புத்த ராஜ மண்டபம் சாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன் ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மர சம்புத்த ராஜ மண்டபத்தின் மேல்மாடி சங்க தேரர்களிடம் பூஜை செய்தல் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (2022 ஜூன் 19) இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.

பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன் விஹாராதிபதி மற்றும் பரிவேனாதிபதி ராஜகீய பண்டித பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அறிவுரையின் பேரில், நன்கொடையாளர்களின் அனுசரணையோடும், ஆள்பலத்தின் மூலமும் நிர்மாணிக்கப்பட்ட விஹாரையின் மரத்தாலான சம்புத்த ராஜ மண்டபம் சங்க தேரர்களிடம் பூஜை செய்யும் நிகழ்வு இன்று (2022 ஜூன் 19) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு இணையாக, கடற்படையால் புதுப்பிக்கப்பட்ட பிரிவேன் வளாகம் மற்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி தம்ம பாடசாலை கட்டிடம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த புனித நிகழ்வுக்காக அஸ்கிரிய விஹாரையின் அதி வணக்கத்திற்குரிய மகாசங்கத்தினர் வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனாபிதான மகா நாயக்க தேரர் மற்றும் மல்வது விஹாரயவின் அனுநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கலாநிதி நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதசிறி தேரர், தியவடன நிலமே நிலங்க தேல பண்டார, இராணுவ தளபதி மற்றும் விமானப்படை தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள். அழைப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.