உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கடற்படைக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளது
2020 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2022 ஏப்ரல் 06) கடற்படைத் தலைமையகத்திலுள்ள அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இடம்பெற்றது.
கடற்படை நலன்புரி நிதியத்தால் நிதியளிக்கப்படும் இந்த புலமைப்பரிசில் திட்டம் மூலம் போரின் போது உயிரிழந்த மற்றும் காணாமல் போன போர் வீரர்களின் 2020 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்த 42 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. இதன்படி, தலா 50,000.00 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களை இன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் நெவில் உபயசிறிவின் மேற்பார்வையில் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்காக கடற்படையின் துனை தளபதி, ரியர் அட்மிரல் வைய். என். ஜயரத்ன, கடற்படையின் பிரதித் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, பணிப்பாளர் நாயகங்கள், கொடி தர அதிகாரிகள், கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், புலமைப்பரிசில் பெற்றவர்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் அவர்களது பெற்றோர்கள் உடனிருந்தனர்.