இலங்கை கடற்படைத் தளபதி பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜாத் கான் நியாசியை (M Amjad Khan Niazi) பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்தில் 2022 பெப்ரவரி 22 ஆம் திகதி சந்தித்தார்.
பாகிஸ்தான் கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெப்ரவரி 21ஆம் திகதி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்துக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்துகொண்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து, பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்திற்கு வருகைதந்த கடற்படைத் தளபதியை, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜாத் கான் நியாசி கடற்படை மரபுகளின்படி அன்புடன் வரவேற்றார். அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
புகைப்பட உபயம்: பாகிஸ்தான் கடற்படை