25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 74 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு மரியாதை செலுத்தியது

74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (2022 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் கட்டளை அதிகாரி கேப்டன் மாலன் பெரேராவின் தலமையில் இடம்பெற்றது.

துப்பாக்கி சூடு மரியாதை தேசிய தினத்திலோ அல்லது தேசத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நாளிலோ நடத்தப்படுகிறது. ஒரு விழாவில் அதிகபட்சமாக சுடக்கூடிய வெடிகளின் எண்ணிக்கை 25 ஆகும், மேலும் இது தேசத்தின் சார்பாக வழங்கப்படும். அதன்படி, இன்று (பிப்ரவரி 04) 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் இருந்து துப்பாக்கிச் சூடு மரியாதை நடத்தியது. இந்த அரிய சந்தர்ப்பத்தை இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நேரடியாக மக்கள் பார்வைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் அளவைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 07 துப்பாக்கி சூடு மரியாதை கப்பலின் பொறுப்பில் இருக்கும் போது கேப்டன் பதவியில் அல்லது அதற்கு கீழே உள்ள ஒரு அதிகாரிக்கு பதில்லிப்பாக வழங்கப்படும். ஒரு தூதருக்கு 09 துப்பாக்கி சூடு மரியாதையும் , ஒரு கான்சல் ஜெனரலுக்கு 11 துப்பாக்கி சூடு மரியாதையும் , ஒரு கொமடோர் அல்லது அதற்கு சம நில பதவிக்கி 11 துப்பாக்கி சூடு மரியாதை, ரியல் அட்மிரல் மற்றும் வைஸ் அட்மிரலுக்கு அல்லது தூதரக பணியின் முடிவில் புறப்படும் போது 13 துப்பாக்கி சூடு மரியாதையும், வைஸ் அட்மிரல் அல்லது இதேபோன்ற தரவரிசைக்கு 15 துப்பாக்கி சூடு மரியாதையும் பாதுகாப்பு செயலாளருக்கு, ஆளுநருக்கு, உயர் ஸ்தானிகருக்கு, 17 துப்பாக்கி சூடு மரியாதைகளும் அட்மிரல் ஒப் த பிலீட் அல்லது பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், ஒரு பொதுநலவாய ஆளுநர் – ஜெனரலுக்கு 19 துப்பாக்கி சூடு மரியாதையும் , மாநிலத் தலைவர், அல்லது ஜனாதிபதிக்கு 21 துப்பாக்கி சூடு மரியாதை வழங்கப்படும்.

மேலும், 1948 ஆம் ஆண்டில், சுதந்திர தினத்தன்று முதல் துப்பாக்கி சூடு மரியாதை காலி முகத்திடலில் இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை 15- துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தியது. 1950 இல் விஜய கப்பலில் துப்பாக்கி சூடு மரியாதை வழங்கப்பட்ட பின் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தடவையாக இன்று (2022 பிப்ரவரி 4), இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் இருந்து துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தப்பட்டன.

துப்பாக்கிச் சூடு மரியாதையின் போது, கப்பலின் பிரதான கொடி மரத்தில் சிறப்பான கொடி அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும், இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் பிரதான கொடி மரத்தில் அலங்கார கொடிகளில் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு வணக்கத்தை “ 25 Gun Salutes for the Nation” என்று அழங்கரிக்கப்பட்டன.

74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 25 துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தல் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் நிருவப்பட்ட பிரேசிலில் தயாரிக்கப்பட்ட 47mm வகையில் 04 துப்பாகிகளால் மேற்கொள்ளப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் மாலன் பெரேரா, நிர்வாக அதிகாரி கொமான்டர் டீ.எம்.ஏ.பீ திஸாநாயக்க, ஆயுதங்கள் அதிகாரி லெப்டினன்ட் கொமான்டர் ஐ.ஏ.டப்.பீ ஏகல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.